
கோலாலம்பூர், ஜனவரி-19, Batik Air விமான நிறுவனம் இரு புதிய வழித்தடங்களூக்கானப் பயணச் சேவைகளைத் தொடக்கியுள்ளது.
அவற்றில் ஒன்று, சுபாங், சுல்தான் அப்துல் அசிஸ் விமான நிலையத்தையும், சபா, கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்தையும் இணைக்கிறது.
மற்றொன்று, கோத்தா கினாபாலு விமான நிலையத்தையும் தாவாவ் விமான நிலையத்தையும் இணைக்கிறது.
ஜனவரி 17 முதல் இப்புதியச் சேவைகள் தொடங்கியுள்ளன.
இக்கூடுதல் சேவையானது, வணிக மற்றும் சுற்றுலா பயணிகளுக்குத் தடையற்ற பயண அனுபவத்தை வழங்கும் Batik Air-ரின் கடப்பாட்டை பிரதிபலிக்கிறது.
அதே நேரம், வட்டார சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சியையும் அது ஆதரிப்பதாக, Batik Air தெரிவித்தது.