Latestமலேசியா

பணிச்சுமைக்கு மத்தியிலும் முனைவர் பட்டம் பெற்ற SPRM உயர் அதிகாரி டத்தோ கருணாநிதி

சுபாங் ஜெயா, அக்டோபர்-25,அரசுப் பணியின் கடுமையான பணிச்சுமைக்கு மத்தியிலும், கல்வியில் சாதனை படைத்துள்ளார் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் மூத்த இயக்குநர் டத்தோ Dr கருணாநிதி Y. சுப்பையா.

MACC சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் மூத்த இயக்குநராகப் பணியாற்றும் இவர், Asia e University பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் தொழில்முறை முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

SPM கல்வித் தகுதியுடன் அரசுப் பணியில் இணைந்த கருணாநிதி, பின்னர் STPM, இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம் எனத் தொடர்ந்து தனது கல்விப் பயணத்தை உயர்த்தினார்.

அதன் உச்சமாக, 2025 ஜனவரி முதல் 2026 மே வரை, சுமார் 17 மாதங்களில் தனது முனைவர் பட்டப் படிப்பை இவர் நிறைவுச் செய்துள்ளார்.

டத்தோ கருணாநிதியின் இச்சாதனை, அரசுப் பணியாளர்கள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

பணிச்சுமையோ, நேரப் பற்றாக்குறையோ, கல்வி முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதையே இவரது வெற்றி எடுத்துக் காட்டுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!