Latestஉலகம்

புளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; இருவர் உயிரிழப்பு

வாஷிங்டன், ஏப் 18 – அமெரிக்காவில் Tallahassee நகரிலுள்ள
Florida State பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது இருவர் மாண்டனர்.

இச்சம்பவத்தில் காயம் அடைந்த ஐவர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என Florida State பல்கலைக்கழகத்தின் தலைவர் ரிச்சர்ட் மெக்குல்லோப் ( Richard McCullough ) தெரிவித்தார். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி 18 ஆண்டு காலம் பணியாற்றிவந்த துணை போலீஸ்காரரின் மகன் என லியோன் மாவட்ட போலீஸ் அதிகாரி Walt McNeil தெரிவித்தார்.

தனது தாயாருக்கு சொந்தமான துப்பாக்கியை தாக்குதல் நடத்தியுள்ள 20 வயதுடைய சந்தேகப் பேர்வழியான Phoenix Ikner பயன்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் மரணம் அடைந்த மற்றும் காயம் அடைந்தவர்களைப் பற்றிய மேல் விவரங்களை அதிகாரிகள் இன்னும் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் Donald Trump பிற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதோடு இதுகுறித்த விரிவான அறிக்கை பின்னர் வெளியிடப்படும் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!