
பூச்சோங், டிசம்பர்-3 – சிலாங்கூர் பூச்சோங்கில் குடிநுழைவு அதிகாரிகள் சோதனைக்கு வந்ததால் GRO எனும் வாடிக்கையாளர்களுக்கு பாலியல் ரீதியாக சேவை வழங்கும் பெண்கள் அலறியடித்து ஓடினர்.
படிக்கட்டுக்கு அடியிலும், கழிவறைக்குள்ளும், மேடை சுவர்களுக்கு நடுவிலும், பானங்களை வைக்கும் கிடங்கிலும் அவர்கள் ஓடி ஒளிந்துகொண்டனர்.
மூன்று மாடி கேளிக்கை மையமொன்றில் நேற்றிரவு 9 மணிக்கு நடத்தப்பட்ட Ops Gegar அதிரடிச் சோதனையின் போது தான் அக்காட்சிகளைக் காண முடிந்தது.
எனினும் ஒளிந்துகொண்டவர்களின் ஜம்பம் பலிக்கவில்லை.
மொத்தமாக 56 வியட்நாம் GRO பெண்கள், 8 மியன்மார் பணியாளர்கள், 2 வங்காளதேச ஊழியர்கள் கைதாகினர்.
உரிமையாளர் ஒத்துழைப்புத் தராததால், மூன்றாவது மாடி கதவை உடைக்க வேண்டிய நிலைக்கு அமுலாக்க அதிகாரிகள் தள்ளப்பட்டனர்.
அதுவும் பல அடுக்கு கதவென்பதால், பெரும் போராட்டத்திற்குப் பிறகே கதவை உடைத்து அதிகாரிகளால் உள்ளே நுழைய முடிந்தது.
சோதனையின் போது அங்கிருந்த உள்ளூர் வாடிக்கையாளர்கள் அதிகாரிகளுடன் பிரச்னையிலும் ஈடுபட்டனர்.
கைதான 66 பேரும் குடிநுழைவுச் சட்ட மீறல் தொடர்பில் விசாரிக்கப்படுகின்றனர்.