Latestமலேசியா

தலையில் ஏற்பட்ட காயத்தினால் 4 மாத குழந்தை இறந்தது

நீலாய் , ஜன 8 – தலையில் ஏற்பட்ட காயத்தினால்  நான்கு மாத குழந்தை  வெள்ளிக்கிழமை இறந்தததாக நீலாய் போலீஸ் தலைவர் சுப்ரிட்டெண்டன்ட் அப்துல் மாலிக் ஹாசிம்  தெரிவித்திருக்கிறார். காலை 9.30 மணியளவில் பெண் ஒருவர் நீலாய் சுகாதார கிளினிக்கிற்கு குழந்தையை கொண்டு வந்ததாகவும் அந்த குழந்தை இறந்ததாக அந்த கிளினிக்கிலிருந்து தகவல் கிடைத்ததாக அவர் கூறினார். நீலாய் மக்கள் வீடமைப்பு திட்டத்தை சேந்த பெண்மணி ஒருவர்  அக்குழந்தையை கிளினிக்கிற்கு கொண்டுவந்ததாக அப்துல் மாலிக் வெளியிட்ட அறிக்கையொன்றில் குறிப்பிட்டார். 

சம்பவத்தன்று, அந்தப் பெண் குழந்தையை கிடத்திவிட்டு அப்பெண் பால் கொடுத்தபோது  வாயிலிருந்து பால் வெளியேறுவதைத் கண்டு   குழந்தையை தூக்கிக்கொண்டு முதுகில் தட்ட முயன்றார்.  அதற்கு முன்பு குழந்தையை  நீலாய் சுகாதார கிளினிக்கிற்கு கொண்டுச் செல்ல  உதவிக்காக அண்டை வீட்டாரையும் அவர் அழைத்துள்ளார். அங்கு மருத்துவ உதவியாளர்கள்  அந்த குழந்தையை பரிசோதித்தபோது அது இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

அக்குழந்தையை போலீஸ் பரிசோதித்தபோது அதன் உடலில் எந்தவொரு காயங்களையும் அவர்கள் கண்டறியவில்லை . எனினும் சனிக்கிழமையன்று சிரம்பான் துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றாலும், தலையில் ஏற்பட்ட காயமே அக்குழந்தையின் மரணத்திற்கான காரணம் என்று தெரியவந்தது. இதன் தொடர்பில்  போலீசார் இதுவரை எவரையும்  கைது செய்யவில்லை என்று  அப்துல் மாலிக் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!