Latestஉலகம்மலேசியா

உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழ்கள்; அயர்லாந்து முதலிடம், மலேசியாவுக்கு 37-ஆவது இடம்

கோலாலம்பூர், ஏப்ரல்-6- 2025-ஆம் ஆண்டுக்கான சக்தி வாய்ந்த கடப்பிதழ்கள் பட்டியலில் உலகளவில் மலேசியா 37-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

102 புள்ளிகளுடன் ஜப்பானுடன் மலேசியா அவ்விடத்தைப் பகிர்ந்துகொண்டது. அதே சமயம் ஆசிய அளவில் சிங்கப்பூர், ஐக்கிய அரபு சிற்றரசு ஆகியவற்றுக்கு அடுத்து மலேசியா மூன்றாமிடத்தைப் பெறுகிறது.

சிங்கப்பூருக்கு 26-ஆவது இடமும் ஐக்கிய அரபு சிற்றரசுக்கு 10-ஆவது இடமும் கிடைத்துள்ளன. குடிநுழைவு மற்றும் வரிவிதிப்பு ஆலோசக நிறுவனமான Nomad Capitalist இந்த கடப்பிதழ் குறியீட்டுப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

விசா மற்றும் பயண வசதிகள், வரிக் கொள்கை, உலகலாயக் கண்ணோட்டம், இரட்டைக் குடியுரிமைப் பெறும் வசதி, தனிப்பட்ட சுதந்திரம் ஆகிய 5 அம்சங்கள் அடிப்படையில் கடப்பிதழ்களுக்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

அவ்வகையில் 109 புள்ளிகளுடன் முதலிடம் அயர்லாந்து நாட்டுக்குக் கிடைத்திருக்கிறது.

அப்பட்டியலில் அயர்லாந்து தனியாக முதலிடத்தைப் பிடிப்பது இதுவே முதன் முறையாகும்; இதற்கு முன் 2020-ல் லக்சம்பர்க் மற்றும் சுவீடன் நாடுகளுடன் அது முதலிடத்தைப் பகிர்ந்துக் கொண்டிருந்தது. சுவிட்சர்லாந்தும் கிரீஸும் இம்முறை இரண்டாமிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளன.

இந்தியா ஓரிடம் சரிந்து 148-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இவ்வேளையில் மோசமான அல்லது பலவீனமான கடப்பிதழ்களைக் கொண்ட நாடுகளில் ஆப்கானிஸ்தான் முன்னணி வகிக்கிறது.

அதனுடன், ஏமன், ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்டவை கடைசி 5 இடங்களை வகிக்கின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!