மலேசியா
குடும்ப சொத்து தகராற்றில் சொந்தத் தந்தையையே குத்திக் கொன்ற மகன்; செராஸில் பயங்கரம்

செராஸ், செப்டம்பர்-14,
செராசிஸ் குடும்ப சொத்தினால் ஏற்பட்ட தகராறு முற்றி, சொந்த மகனே தந்தையைக் கத்தியால் குத்தி கொலைச் செய்துள்ளான்.
இப்பயங்கர சம்பவம் நேற்று காலை பண்டார் பெர்மாய்சூரியில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து போலீஸ் வந்து பார்த்த போது 62 வயது அம்முதியவர் தலையிலும் முகத்திலும் இரத்தக் காயங்களுடன் வீட்டின் வரவேற்பறையில் பேச்சு மூச்சின்றி கிடந்தார்.
சடலம் சவப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், சந்தேக நபரான 24 வயது வேலையில்லா இளைஞன் பின்னர் கைதுச் செய்யப்பட்டான்.
கொலை விசாரணைக்காக அவன் 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டதை செராஸ் போலீஸ் உறுதிப்படுத்தியது.