
கோலாலம்பூர்- டானா இனோவாசி மீடியா 2.0 திட்டத்தின் கீழ் RM30 மில்லியன் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளதால், தகுதியுள்ள ஊடக நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விரைந்து விண்ணப்பிக்க வேண்டும் எனத் தொடர்புத் துணையமைச்சர் தியோ நீ சிங் கேட்டுக்கொண்டார்.
டிஜிட்டல் மாற்றத்தால் வேகமாக மாறிவரும் ஊடகச் சூழலை எதிர்கொள்ளவும், நிலையான வணிக மாதிரிகளை உருவாக்கவும் இந்த நிதி உதவும் என்றார். தொழில்நுட்ப மாற்றங்களால் சவால்களை எதிர்கொள்ளும் ஊடகப் பணியாளர்களின் நலனைப் பாதுகாப்பதும் இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.
முந்தைய டானா இனோவாசி மீடியா 1.0 திட்டத்தின் கீழ், மொத்தம் 72 நிறுவனங்கள் நிதி பெற்றன. அவற்றில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஐந்து ஊடக நிறுவனங்களும் அடங்கும் என தியோ நீ சிங் கூறினார்.



