Latest

போதைப்பொருளுடன் சிக்கிய மலேசியர் இந்தோனேசியாவில் கைது

இந்தோனேசியா, ஆகஸ்ட் 4 – இந்தோனேசியா சர்வதேச விமான நிலையத்தில் 22 வயதான மலேசியர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் வந்த அவரை சோதனையிட்டபோது, அவர் அணிந்திருந்த ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த 990 கிராம் மெத்தாம்பெட்டமைன் மற்றும் 1,089 எக்ஸ்டசி (ecstasy) மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

பண நெருக்கடி காரணமாக சர்வதேச போதைப்பொருள் கும்பலுக்கு கூரியராக செயல்பட்டதாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேல் விசாரணைக்காக அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!