Latestமலேசியா

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அக்டோபரிலிருந்து கட்டாய EPF அமலாக்கம்

 

கோலாலம்பூர், அக்டோபர்- 1,

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டாய EPF பங்களிப்பு விதி இந்த ஆண்டு அக்டோபர் மாத சம்பளத்திலிருந்து அமல்படுத்தப்படவுள்ளதாக ஊழியர் சேம நிதி வாரியம் (EPF) அறிவித்துள்ளது.

இதன்படி, முதலாளி மற்றும் தொழிலாளர் இருவரும் மாதச்சம்பளத்தின் 2 சதவீதத்தை EPF-க்கு செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் வேலை அனுமதி ஆவணங்களைக் கொண்ட அனைவருக்கும் இந்த அமலாக்கம் செயல்படுத்தப்படும்.

EPF, வெளிநாட்டு தொழிலாளர்களின் பதிவை குடிநுழைவுத்துறையினருடன் (Immigration Department) இணைந்து தானியங்கி முறையில் மேற்கொள்ளும் என்றும் பிற வகை அனுமதி பாஸ் வைத்திருப்போர் EPF அலுவலகத்தில் நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

2026 ஜனவரி முதல், வெளிநாட்டு ஊழியர்கள் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்றும் EPF தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!