
அம்பாங் ஜெயா, ஜனவரி-22-அம்பாங் ஜெயாவில் பள்ளியில் 7 வயது மாணவனின் கன்னத்தில் மாணவி அறைந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீஸார் புகாரைப் பெற்றுள்ளனர்.
திங்கட்கிழமை நடந்த
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
வரிசையில் நடந்து செல்லும் போது முன்னே மெதுவாக சென்ற தனது மகனை, பின்னால் வந்த மாணவி ஆத்திரத்தில் கன்னத்தில் அறைந்ததாகவும், இதனால் மகனின் மூக்கில் இரத்தக் கசிவு ஏற்பட்டதாவும் பெற்றோர் புகாரளித்துள்ளனர்.
சிகிச்சைக்குப் பிறகு அம்மாணவனுக்கு 2 நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு, சம்பவம் தொடர்பாக எந்த கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், முழுமையான விசாரணைக்கு பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கூறிற்று.
இவ்வேளையில், நடந்த சம்பவம் குறித்து பள்ளியிலும் உள் விசாரணை நடைபெறும் என தலைமையாசிரியர் உறுதியளித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவியும் வேறு வகுப்புக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.



