Latestசிங்கப்பூர்மலேசியா

5 லட்சம் சிங்கப்பூர் டாலர் மோசடி: மூளையாகச் செயல்பட்ட மலேசிய ஆடவர் சிங்கப்பூரிடம் ஒப்படைப்பு!

சிங்கப்பூர், செப்டம்பர்-24,சிங்கப்பூரில் 500,000 டாலருக்கும் அதிகமான மோசடி மற்றும் பணமோசடி வழக்கில் மூளையாகச் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் மலேசிய ஆடவர் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
​
Da Xiang என்ற புனைப்பெயரைக் கொண்ட 27 வயது Chin Hock Khan என்பவரை மலேசியப் போலீஸ் கைதுச் செய்து, சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.

​அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து சிங்கப்பூரியர்களை ஏமாற்றி வந்த கும்பலை இவர் வழிநடத்தியதாகக் கூறப்படுகிறது.

​மலேசியக் கூட்டாளிகளை வேலைக்குச் சேர்த்து, ஜோகூர் பாருவில் சந்திப்புகளை நடத்தி, ரொக்கம் மற்றும் தங்க நகைகளை எல்லை தாண்டி கடத்திச் செல்ல இவர் உத்தரவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

​குறைந்தது 5 லட்சம் சிங்கப்பூர் வெள்ளியை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ய சதித்திட்டம் தீட்டியதாக Chin மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

​குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!