Latestமலேசியா

MyJPJயின் புகார் தளத்தில் 44,000-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு

கோலாலம்பூர், ஏப்-22-ஜனவரி மாதம் முதல் சாலைப் போக்குவரத்துத் துறை தனது MyJPJ செயலியின் மின்னணுப் புகார் தளம் வழியாக 44,000-க்கும் மேற்பட்ட சாலைப் போக்குவரத்து விதிமீறல் புகார்களைப் பெற்றுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்காத விதிமீறல்களே அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன என்று JPJ-யின் திட்டமிடல் மற்றும் நடவடிக்கைக்கான துணை தலைமை இயக்குநர் டத்தோ ஜஸ்மானி ஷபாவி ( Jazmanie Shafawi ) தெரிவித்தார்.

இதுவரை, 2026-ஆம் ஆண்டின் பதிவுகளின்படி, குறிப்பாக சாலை விதிமீறல்கள் தொடர்பான 44,117 புகார்களை சாலை போக்குவரத்துத்துறை பெற்றுள்ளது.

இவற்றில், போக்குவரத்து சிக்னல்களுக்கு இணங்காதது தொடர்பான புகார்களே அதிக எண்ணிக்கையில் இருப்பதாக அவர் கூறினார்.

ஜேபிஜே தனது அணுகுமுறையை மேம்படுத்தவும், அடிக்கடி நிகழும் குற்றங்களில் கவனம் செலுத்தவும் இந்தத் தரவுகள் தொடர்ந்து ஆராயப்படும் என இன்று பங்சாரில் உள்ள பாலாய் பெரித்தாவில் டிவி 3 இன் மலேசியா ஹரி இனி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், விபத்துகள் ஏற்படுவதில் சாலைப் பயனாளிகளின் மனப்பான்மையே இன்னும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

குறிப்பாக போக்குவரத்து சிக்னல்களை மீறுவது போன்றவற்றில், குற்றப் பதிவுகளின் அதிகரிப்புக்கு மோட்டார் சைக்கிள்களும் பங்களிக்கின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!