
நைரோபி, ஆகஸ்ட் 8 – கென்யாவின் கியாம்பு மாவட்டத்தில் நேற்று AMREF-க்கு சொந்தமான மருத்துவ விமானம் குடியிருப்பு கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள், ஒரு விமானி மற்றும் கட்டிடத்தில் வசித்த இருவர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது
இவ்விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
விபத்தின் போது ஏற்பட்ட புகை, தீ மற்றும் மீட்பு பணிகள் இடம்பெறும் காட்சிகள் வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் முழு அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.