
மெந்தகாப், ஜனவரி-5,
பஹாங்கில் 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 7 போலீஸ்காரர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் சிக்கி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மெந்தகாப்பில் ஒரு கடையில் நடந்த சோதனையில் அவர்கள் கைதாகினர்.
தொடக்கக் கட்ட சிறுநீர் பரிசோதனையில் அந்த எழுவரும் போதைப்பொருள் உட்கொண்டது உறுதிச் செய்யப்பட்டது.
அதே சோதனையில், 2 தாய்லாந்து பெண்கள் மற்றும் ஓர் உள்ளூர் ஆடவரும் கைதுச் செய்யப்பட்டனர்.
அனைவரும் தற்போது 1952 போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
போலீஸாரின் தவறான நடத்தையில் எதற்கும் சமரசமம் இல்லையென, பஹாங் போலீஸ் தலைவர் Yahaya Othman எச்சரித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த 7 போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.



