Latestமலேசியா

JMKU மடானி மலிவு விற்பனையில் RM8.5 மில்லியன் விற்பனைப் பதிவு – டத்தோ ஸ்ரீ ரணமன் தகவல்

கோலாலம்பூர், பிப்ரவரி-13. – நாடு முழுவதும் இதுவரை 95 தொழில்முனைவர் கூட்டுறவு மடானி மலிவு விற்பனைகள் நடத்தப்பட்டு, அவற்றில் 8.5 மில்லியன் ரிங்கிட்டுக்கு விற்பனைப் பதிவாகியுள்ளது.

மக்களின் சுமையையும் வாழ்க்கைச் செலவினத்தையும் குறைக்கும் நோக்கத்தைக் கொண்ட இந்த JMKU திட்டம், 25,000 தொழில் முனைவர்களுக்கும் பயனளித்துள்ளத்து.

தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மக்களவையில் அதனைத் தெரிவித்தார்.

இவ்வேளையில், அந்த மலிவு விலை விற்பனைகளில் வழங்கப்படும் விலைக் கழிவு விகிதங்கள், இடங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் வித்தியாசப்படுகிறது.

உதாரணத்திற்கு, தனது சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொதொகுதியில் தான் நாட்டிலேயே மிக மலிவாக 50 விழுக்காடு விலைக் கழிவு வழங்கப்படுகிறது;

ஆனால் அந்தச் செலவை தாமே ஏற்றுக் கொள்வதாக டத்தோ ஸ்ரீ ரமணன் சொன்னார்.

ஆக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனது வைத்து அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மேலும் அதிகமான விலைக் கழிவை வழங்கலாமென்றார் அவர்.

மற்றொரு நிலவரத்தில்,
கூட்டுறவுக் கழகங்களின் வெற்றியை அதிகரிக்க SKM எனப்படும் மலேசிய கூட்டுறவு ஆணையம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கூட்டுறவு வணிக நடவடிக்கைகளை மேம்படுத்த தகுதியுள்ள கூட்டுறவுக் கழகங்களுக்கு SKM-மின் சுழல் மூலதன நிதி மூலம் 200,000 ரிங்கிட் பிணை ஒப்பந்தமற்ற நிதி வசதிகளை வழங்குவதும் அவற்றிலடங்கும் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!