
சைபர்ஜெயா, ஏப்ரல்-16-ஊடகங்களின் பங்கை கௌரவிக்கும் வகையில், Akademi Dalam Industri 2026 அல்லது ADI 2026 ஊடக விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
MPC எனப்படும் மலேசிய உற்பத்திக் கழகம் நடத்தும் இந்த விருதளிப்பு, உற்பத்தித்திறன், புத்தாக்கம் மற்றும் மனித வள மேம்பாட்டை மையமாகக் கொண்ட ஊடக உள்ளடக்கங்களை அங்கீகரிக்கிறது.
இந்த விருது உயர்தரமான மற்றும் சமூகத்திற்கு தாக்கம் அளிக்கும் செய்தி உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் என, MPC துணை தலைமை இயக்குநர் Mohamad Norjayadi Tamam தெரிவித்தார்.
இதில் 3 முக்கியப் பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன. அவை, அச்சு மற்றும் செய்தி தளங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி உட்பட வீடியோ ஊடகங்கள், மேலும் குறும்பட வடிவிலான சமூக ஊடகங்கள் ஆகும்.
மலேசியப் பத்திரிகையாளர் கழகமான MPI, இந்த விருதின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்; வெற்றியாளர்கள் செப்டம்பர் 23-ஆம் தேதி அறிவிக்கப்படுவர்.
இம்முயற்சி, தொழில் சார்ந்த திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் ADI திட்டத்தின் ஒரு பகுதியாகும்.



