மலேசியா

இன்னோர் ஆணுடன் ஆபாச வீடியோவா? $100,000 பணம் கேட்டு ரஃபிசிக்கு மின்னஞ்சல் மிரட்டல்

கோலாலம்பூர், செப்டம்பர்-14,

இன்னோர் ஆணுடன் தாம் ஆபாச வீடியோவில் இருப்பதாகவும், அதை
வைரலாக்கக் கூடாது என்றால் 100,000 டாலர் பணம் தர வேண்டுமென்றும் தமக்கு மிரட்டல் வந்திருப்பதாக, முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்பி அம்பலப்படுத்தியுள்ளார்.

அடையாளம் தெரியாத முகவரியிலிருந்து மின்னஞ்சலில் அம்மிரட்டல் வந்திருப்பதாக அவர் சொன்னார்.

வீடியோவின் screenshot படமும் பணத்தை வங்கிக் கணக்குக்கு மாற்றுவதற்கான QR குறியீடும் அந்த மின்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ளது.

சற்று மங்கலாக்கப்பட்டுள்ளஅந்த வீடியோவில் தமது உருவத்தை ஒத்திருக்க்கும் முகம் தெரிவதாகக் கூறிய ரஃபிசி, ஏதோ ஒரு பழைய வீடியோவை மீண்டும் எடிட் செய்து இப்புதிய வீடியோவை மர்ம நபர்கள் உருவாக்கியிருப்பதாகக் கூறினார்.

தன்னுடைய தனிப்பட்ட தொடர்புக் கருவிகளான கைப்பேசி, மடிக்கணினி போன்றவற்றை ஊடுருவும் முயற்சியாகவும் அவர் அதனைக் குறிப்பிட்டார்.

ஏற்கனவே தனது iPhone மற்றும் Apple கணக்கை ஊடுருவ முயற்சி மேற்கொள்ளப்பட்டதை ரஃபிசி சுட்டிக் காட்டினார்.

இவ்வேளையில் ரஃபிசியைப் போலவே சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென்னுக்கும் (Wong Chen) அதே மிரட்டல் மின்னஞ்சல் கிடைத்துள்ளது.

இருவருமே ஒரே ஆணுடன் தொடர்பு வைத்திருப்பதாக அந்த மிரட்டலில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வோங் சென் போலீஸில் புகார் செய்துள்ள நிலையில், மர்ம மின்னஞ்சலை அனுப்பியது யாரென்பதை கண்டறிய விசாரணைத் தொடங்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!