
புது டெல்லி, டிசம்பர்-8 – நவம்பர் 12-ஆம் தேதி பேங்கோக்கிலிருந்து சுவிட்சர்லாந்து பயணமான 12 மணி நேர விமானத்தில், நடுவானிலேயே ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்ட வீடியோ கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானி அறைக்கு அருகே நடந்த அச்சம்பவம் முழுவதுமாக CCTV கேமராவில் பதிவானது.
ஏதேச்சையாக அதனைப் பார்த்து விட்ட விமானிகளும் துணை விமானிகளும் கைப்பேசிகளில் நேரடி வர்ணனையோடு பதிவுச் செய்து, whatsapp குழுக்களில் பகிர்ந்து விட்டனர்.
வழக்கம் போல இதுவும் இணையத்தில் வைரலாகி விட்டது.
இந்நிலையில், இரகசியமாக வீடியோ எடுத்து அதை கசிய விட்ட விமானிகள், தனிமனித அத்துமீறல் தொடர்பில் உள் விசாரணைக்கு ஆளாகியுள்ளானர்.
ஒரு பொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்டது தவறே என்றாலும், அப்பயணிகளின் அனுமதியின்றி அவர்களை வீடியோ எடுத்து கசிய விடுவது முறையல்ல என சுவிஸ் ஏர் விமான நிறுவனம் அறிக்கையொன்றில் கூறியது.
வைரலான வீடியோக்களும் சரி, சமூக வலைத்தளங்களில் அவற்றுக்கு வைக்கப்பட்ட கருத்துகளும் சரி, அந்த ஜோடியை ‘சிறுமைப்படுத்துவதாகும்’ என அது சுட்டிக் காட்டியது.
விமானத்தினுள் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டதானது, செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலின் போது விமானம் கடத்தப்பட்டது போன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காகத் தான்.
விமானி அறையினுள் அத்துமீறும் முயற்சிகளை கண்காணிப்பதே அவற்றின் வேலையே தவிர, பயணிகளையும் அவர்களின் தனிப்பட்ட விஷயங்களையும் வேவு பார்ப்பது அல்ல என சுவிஸ் ஏர் பேச்சாளர் குறிப்பிட்டார்.