
கோலாலம்பூர், மார்ச் 4 – அதிக ஆற்றல் கொண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டும் குழுவினர் நாடாறிந்த நகைச்சுவைக் கலைஞர் சத்யாவுக்கு பாராட்டு நடத்தி அன்பளிப்பு வழங்கினர்.
செராஸ் தாமான் மலூரியில் உள்ள உணவகத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஜோகூர், மலாக்கா, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரிலிருந்து 10 மோட்டார் சைக்கிள் குழுவினர் கலந்துகொண்டனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுவது பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும் சமுதாயத்திற்கு உதவிக் கரம் நீட்டுவது கடமையாக இருப்பதால் Tokoh Negara விருது பெற்ற மண்ணின் மைந்தர் கலைஞர் சத்தியாவை பாராட்டுவதை மிகப் பெரிய கௌரவமாக கருதுவதாக இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய Legendary Riders Malaysia Clubன் தலைவர் மகேந்திரமணி ராகவன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு தனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் அதே வேளையில் நாட்டிலுள்ள இதர நலிந்த கலைஞர்களுக்கும் உதவிக்கரம் வழங்க வேண்டும் என கலைஞர் சத்தியா தனது ஏற்புரையில் தெரிவித்தார்.
கலையுலகத்தை சேர்ந்த தன்னை மறக்காமல் உதவி வழங்க முன்வந்த அனைத்து தரப்பினருக்கும் சத்தியா நெகிழ்ச்சியோடு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த Johor Solo Biker தேவராஜ் அவர்களுக்கு டத்தோ ஆனந்த் நன்றி தெரிவித்துக் கொண்டார்.