
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-2 – முறையான சாலை வரி மற்றும் வாகனக் காப்புறுதியைக் கொண்டிராத 53 ஆடம்பரக் கார்கள் கிள்ளான் பள்ளத்தாக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ மேற்கொண்ட Ops Luxury சோதனையில் கைப்பற்றப்பட்ட அந்த Rolls-Royce Lamborghini, McLaren, Aston Martin, BMW வாகனங்கள் ஒவ்வொன்றும் இலட்சக்கணக்கான ரிங்கிட் மதிப்பிலானவை.
ஒரு பிரபல தொழிலதிபருக்குச் சொந்தமான 3 மில்லியன் ரிங்கிட் Rolls-Royce Cullinan SUV வாகனமும் அவற்றிலடங்கும். 2022 முதல் சாலை வரி மற்றும் வாகனக் காப்புறுதியைப் புதுப்பிக்காத Mercedes வாகனமும் பறிமுதல் ஆனது.
அவ்வாகனங்களை ஓட்டிய 3 வெளிநாட்டவர்களும் அடையாளம் காணப்பட்டனர்; அவர்களில் இருவருக்கு வாகானமோட்டும் உரிமம் கிடையாது, இன்னொருவரோ போலியான அனைத்துலக வாகானமோட்டும் உரிமைத்தை வைத்திருந்தார்.
இந்நிலையில், அவர்களுக்கு வாகனங்களை வாடகைக்கு விட்ட அல்லது ஓட்ட அனுமதித்த உரிமையாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என JPJ அமுலாக்கப் பிரிவின் மூத்த இயக்குநர் Muhammad Kifli Ma Hassan கூறினார்.