
செலாயாங், நவம்பர்-19,சிலாங்கூர், செலாயாங்கில் கனமழையின் போது மரம் ஒன்று விழுந்ததில், 26 வயது மோட்டார் சைக்கிளோட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று பிற்பகல் சுமார் 2.20 மணியளவில், செத்தியா ஈக்கோ தெம்ப்ளர், ஜாலான் செட் 2/8 சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
பலத்த மழையின்போது மரம் ஒன்று வேரோடு சாய்ந்து, அவ்வழியாகச் சென்ற லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது.
இதில் மோட்டார் சைக்கிளோட்டி மரத்தின் அடியில் சிக்கி, சுயநினைவிழந்த நிலையில் காணப்பட்டார்.
தகவல் கிடைத்ததும், செலாயாங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.
பிற்பகல் 2.35 மணியளவில் அந்த இளைஞர் மீட்கப்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.
இதனிடையே, சாலையின் ஒரு பகுதியை மறித்திருந்த மரத்தை அகற்றும் பணிகள் பிற்பகல் 3.20 மணியளவில் நிறைவடைந்தன.
உயிரிழந்தவரின் உடல் மேல் நடவடிக்கைக்காகப் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டது.



