Latestமலேசியா

போதைப்பொருள் வாங்குமிடமாக செயல்பட்ட கோலாலம்பூர் கட்டுமானப் பகுதியில் போலிஸ் அதிரடி; 112 போதைப் பித்தர்கள் கைது

கோலாலம்பூர், ஆக 20 – கூட்டரசு தலைநகரில் தங்க முக்கோணப் பகுதியில் போதைப் பொருள் வாங்கிச் செல்லும் இடமாக இருந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 112 போதைப் பித்தர்கள் கைது செய்யப்பட்டனர்.

19 முதல் 61 வயதுடைய அவர்களில் ஐந்து பெண்களும் அடங்குவர்.

இவர்கள் அனைவரும் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர் என்பது அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தெரியவந்தது.

இவர்களில் சிலர் பாதுகாவலர்களாகவும் குத்தகை தொழிலாளர்களாகவும் இருந்து வருவதாக தேசிய போதைப் பொருள் எதிர்ப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ருஸ்லின் ஜூசோ (Datuk Ruslin Jusoh ) தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 1983ஆம்ஆண்டின் போதைப் பித்தர்களின் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போதைப் பித்தர்களிடையே Port Imnbi என்றழைக்கப்படும் கைவிடப்பட்ட கட்டுமான பகுதியில் 20 தனிப்பட்ட நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!