Latestமலேசியா

கேமரன் மலைக்குச் செல்லும் சாலையில் நிலச்சரிவு – ஒரு வழிப்பாதையாக மாற்றம்

தாப்பா, நவம்பர் 3 – தாப்பா, கேமரன் மலை (Jalan Tapah-Cameron Highlands) சாலையின் 22ஆவது கிலோமீட்டரில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காலை 10.50 மணியளவில் சுமார் 40 மீட்டர் நீளத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டதுடன், மரங்களும் முறிந்து சாலையில் விழுந்தன.

இதனைத் தொடர்ந்து, மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது வாகனங்கள் செல்ல ஒரு வழிப்பாதை மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பொதுப்பணித்துறை (JKR) மேற்கொண்ட ஆய்வின்படி, அச்சாலை வாகனப் போக்குவரத்திற்குப் பாதுகாப்பானதாக இருப்பதாகப் பேராக் மாநில உள்கட்டமைப்பு, எரிசக்தி, நீர் மற்றும் பொதுப் போக்குவரத்துக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் நிசார் ஜமாலுடின் (Datuk Seri Mohammad Nizar Jamaluddin) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!