Latestமலேசியா

மர்மத்தை அவிழ்க்கும் கடைசி முயற்சி; மீண்டும் தொடங்கிய MH370 தேடல் பணி

லண்டன், பிப்ரவரி-25 – 11 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370-மைத் தேடும் பணி, இந்துப் பெருங்கடலில் தொடருகிறது.

விமானம் மறைந்த மர்மத்தை அவிழ்ப்பதற்கான கடைசி முயற்சி இதுவாகும்.

அவ்வகையில், Ocean Infinity நிறுவனத்துக்குச் சொந்தமான ஆழ்கடல் துணை கப்பலான Armada 7806, கடந்த வார இறுதியில் பெர்த் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு புதிய தேடல் மண்டலத்தை அடைந்துள்ளது.

கப்பல் சென்று சேர்ந்து கையோடு, கடலுக்கடியில் விரிவான ஸ்கேன் செய்ய தானியங்கி வாகனமொன்று உடனடியாக அனுப்பப்பட்டதாகக் ஆஸ்திரேலிய மற்றும் பிரிட்டிஷ் ஊடகங்கள் கூறுகின்றன.

அந்த போயிங் 777 விமானத்தின் சிதைந்த பாகங்கள் இருக்கலாமென நம்பப்படும் 4 முக்கிய இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, 15,000 கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய 6 வார கால தேடலில் Armada 7806 கப்பல் ஈடுபடவுள்ளது.

இருப்பினும், கடற்பரப்பின் சிக்கலான நிலப்பரப்பு மற்றும் கணிக்க முடியாத வானிலைக் காரணமாக, விமானத்தைத் தேடும் முயற்சி சவாலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமானத்தைத் தேடும் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு Ocean Infinity நிறுவனத்துக்கு அனுமதி வழங்குவதாக, கடந்த டிசம்பரில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உறுதிப்படுத்தினார்.

MH370 பயணிகளின் குடும்பங்களுக்கு அரசாங்கம் அளித்த உறுதிப்பாட்டுக்கு ஏற்ப அம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

No Find No Fee அதாவது கண்டுபிடிக்கவில்லை என்றால் கட்டணம் கிடையாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் Ocean Infinity-க்கு அந்த அனுமதி வழங்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!