Latestமலேசியா

லிப்பிசில், மண்ணில் புதையுண்ட இந்தோனேசிய தொழிலாளி பலி

குவந்தான், டிசம்பர் 11 – பஹாங், குவாலா லிபிஸில், CSR நெடுஞ்சாலை கட்டுமான தளத்தில், மண்ணில் புதையுண்ட இந்தோனேசிய தொழிலாளர் ஒருவர், பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று காலை மணி 11.15 வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், 28 வயது கைரூல் அனாம் என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதர மூன்று தொழிலாளர்களுடன் சேர்ந்து, அவர் கழிவுநீர் அமைப்புக்கான வடிகாலை தோண்டிக் கொண்டிருந்ததாக, லிபிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி முஹமட் நோர் தெரிவித்தார்.

மண்வாரி இயந்திரம் தோண்டுவதை நிறுத்தியதும், வேலைக்கு சேர்ந்து ஐந்து மாதங்களே ஆகும் அந்த தொழிலாளி, ஆழத்தை அளவிட, 2.5 மீட்டர் வடிக்காலுக்குள் இறங்கிய போது, திடீரென சரிந்து விழுந்த மண்ணில் புதையுண்டதாக கூறப்படுகிறது.

அச்சம்பவத்தை நேரில் கண்ட இதர மூன்று தொழிலாளர்கள், உடனடியாக கால்வாயிக்குள் இறங்கி அவரை மீட்க முயன்றனர்.

எனினும்,15 நிமிட போராட்டத்திற்கு பின்னர், அவரது சடலத்தை மட்டுமே மீட்க முடிந்ததாக அஸ்லி சொன்னார்.

சடலம் பின்னர் லிபிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை; சம்பந்தப்பட்ட கட்டுமான பகுதியின் பாதுகாப்பு குறித்து தீயணைப்பு மீட்புப் படை வீரர்கல் சோதனையை மேற்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!