Latestமலேசியா

PLKN 3.0 பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்கள் இப்போது முடிவுகளை சரிபார்க்கலாம்

கோலாலம்பூர், ஏப்ரல்-23, PLKN 3.0 தேசிய சேவைப் பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்கள், அதன் முடிவுகளை இப்போது சரிபார்க்கலாம்.

தேசிய சேவைப் பயிற்சியின் அதிகாரப்பூர்வ இணையத் தளமான https://jlkn.mod.gov.my/ என்ற முகவரியில் அவர்கள் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

மே 11 முதல் ஜூன் 24 வரை 45 நாட்களுக்கு நடைபெறும் இந்த முதல் கட்ட பயிற்களில் 550 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலாலம்பூர் மற்றும் பஹாங் பெக்கானில் உள்ள இராணுவ பட்டாள முகாம்களில் பயிற்சிகள் நடைபெறும்.

70 விழுக்காடு அடிப்படை இராணுவப் பயிற்சியையும் 30 விழுக்காடு தேசியவாத அம்சங்களையும் உட்படுத்தியிருக்கும்.

மலேசிய இளையோர் மத்தியில் நாட்டுக்கான விசுவாசத்தை அதிகரிக்கும் முயற்சியில், இந்த PLKN பயிற்சிக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!