
கோலாலம்பூர் – ஜூன் 12 – மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் இந்திய பிரதிநிதித்துவ சபையின் ஏற்பாட்டில் 8ஆவது ஆண்டாக இம்மாதம் 14 ஆம்தேதி புதியதோர் விடியல் என்ற மேடை நாடக நிகழ்சியை Panggung Seni UKM மில் நடத்தவிருக்கிறது . இந்த நிகழ்வில் இந்திய மாணவர்கள் தங்களது கலை மற்றும் திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தவிருக்கின்றனர். இந்த மேடை நாடகம் யு.கே.எம் பல்கலைக்கழகத்தில் இந்திய பிரதிநிதித்துவ சபையைச் சேர்ந்த மாணவர்கள் சுயமாக எழுதிய கதையாகும். நமது மாணவர்களின் கலை திறமையை வெளிக்கொணரும் நோக்கத்தில் படைக்கப்படும் இந்த நிகழ்ச்சி அவர்களின் திறமையை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பாக அமையவிருக்கிறது.
மேலும்,நுழைவு சீட்டு விற்பனை தொடங்கியுள்ள நிலையில் அனைவரும் அதனை பெற்று இந்நிகழ்ச்சியை ஆதரவு அளிக்குமாறு நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சி குறித்து தகவல்கள் பெற mtkviii எனும் instagram page-க்கு சென்ற காணலாம். மற்றும்
Vinojith Wickrama Surendre 011 -69658534 மற்றும்
Laxshan Ganasan 012-2034878 ஆகியோரிடம் மேல் விவரங்களை பெறலாம்.