
கிள்ளான் , அக் 25 – பாராங் கத்தியை பயன்படுத்தி கூட்டாக கொள்ளையிட்டதாக மாற்றுத் திறனாளி ஒருவர் உட்பட ஐந்து ஆடவர்கள் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிபதி ஷரியா ஹஸ்சின்டி சைட் ஒமார் ( Sharifah Hascindie Syed Omar ) முன்னிலையில் கொண்டுவரப்பட்ட அந்த குற்றச்சாட்டை அவர்கள் அனைவரும் மறுத்தனர்.
54 வயது ஆடவரை பாராங் கத்தியால் மிரட்டி 74,500 ரிங்கிட் மதிப்புடைய சிலைகளை அந்த சந்தேகப் பேர்வழிகள் கொள்ளையிட்டதாக குற்றப்பத்ததிரிகையில் தெரிவிக்கப்பட்டது.
போர்ட் கிள்ளான் , பண்டமாரானில் உள்ள அந்த ஆடவரின் வீட்டில் இம்மாதம் 3ஆம் தேதி விடியற்காலை மணி 6.16 அளவில் அவர்கள் இக்குற்றத்தை
புரிந்ததாக கூறப்பட்டது. குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை மற்றும் பிரம்படி வழங்கப்படும் தண்டனை சட்டத்தின் 395 மற்றும் 397 ஆவது விதியின் கீழ் அந்த சந்தேகப் பேர்வழிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம்தேதி மறு விசாரணைக்கு செவிமடுக்கப்படும். குற்றஞ்சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 10,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு வழக்கு விசாரணை முடியும்வரை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அருகேயுள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.