Latestமலேசியா

Tioman தீவில் ஸ்கூபா டைவிங்கின்போது மயக்கமடைந்த சுற்றுலாப் பயணி மரணம்

குவாந்தான், அக்-1-பஹாங், Pulau Tiomanனில் Kampung Salang கடற்பகுதியில் ‘டிஸ்கவரி ஸ்கூபா டைவிங்’ (DSD) நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 55 வயதான ஆப்கானிஸ்தான் நாட்டவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

Mohammed Seyar Musazay என அடையாளம் காணப்பட்ட அந்நபர், தனது 24 வயது மகளுடன் விடுமுறைக்காக Pulau Tiomanனுக்கு வந்துள்ளார். காலை 11 மணியளவில் மகளுடனும் டைவிங் பயிற்சியாளருடனும் அவர் கடலுக்குச் சென்றதாக Rompin காவல் துறைத் தலைவர் Sharif Shai Sharif Mondoi தெரிவித்தார்.

சுமார் ஆறு மீட்டர் ஆழத்தில் 20 நிமிடங்கள் நீடித்த டைவிங்கின்போது அவர் ஆரம்பத்தில் எந்தப் பிரச்சினையும் இன்றி இருந்துள்ளார். முடிவடையும் நேரத்தில், மூன்று மீட்டர் ஆழத்தில் இருந்த அவர், மேற்பரப்புக்கு வர சிரமப்பட்டதைப் பயிற்சியாளர் கவனித்துள்ளார்.

பின்னர் பயிற்சியாளர் நெருங்கிய போது, சுவாசக் கருவி வாயிலிருந்து கழன்றிருந்ததுடன் அவர் சுயநினைவின்றி காணப்பட்டார். உடனடியாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்ட அவர், கிராமவாசியின் படகு மூலம் அருகிலிருந்த சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

அவரது சடலம் கடல்சார் காவல் படகில் Teluk Gading பகுதிக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, பின்னர் குவாந்தானில் உள்ள Tengku Ampuan Afzan மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!