டுங்குன், அக்டோபர் 15 – இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி, டுங்குன் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் உயிரிழக்கக் காரணமாகக் கருதப்படும் பெண் ஓட்டுநர் மீது, இன்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால், இன்று டுங்குன் நீதிமன்றத்தில் குற்றச்சட்டப்பட்ட 49 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், குற்றச்சாட்டப்பட்ட அந்த பெண்ணை மனநல பரிசோதனைக்காக ஜோகூர் பாரு, Permai மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு சிகிச்சை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு நவம்பர் 17ஆம் திகதி மறு செவிமடுப்புக்கு வருமென அறிவித்தது.
முன்னதாக, விபத்து நிகழ்ந்த இடத்தில் கைது செய்யப்பட்ட பின்னர், மனநலம் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் அந்தப் பெண் கடந்த வியாழக்கிழமை தொடங்கி நான்கு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டார்.
கடந்த அக்டோபர் 9ஆம் திகதி, எஸ்.யூ.வி ரக காரை செலுத்திய அப்பெண் நான்கு மாணவர்கள் பயணித்த ஒரு மோட்டார் சைக்கிள்களை மோதினார்.
மூவர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.