
செர்டாங், ஆகஸ்ட்-3,
செர்டாங், மலேசியப் புத்ரா பல்கலைக்கழகத்தில் பேருந்து மரத்தில் மோதியதில், ஓர் ஆசிரியையும் 3 பாலர் பள்ளி மாணவர்களும் காயமடைந்தனர்.
44 வயது நபர் ஓட்டிச் சென்ற அப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடப்பக்கமாக தடம்புரண்டு மரத்தில் மோதியாக போலீஸ் கூறிய நிலையில், மேல் விசாரணையில், அதிக சோர்வாலும், தூக்கமின்மையாலும் பேருந்து ஓட்டுனர் கண்ணயர்ந்ததே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது.
தலையில் ஏற்பட்ட காயங்களுக்கு அந்நால்வரும் செர்டாங் மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்றனர்.
கல்விச் சுற்றுலாவில் ஏற்பட்ட அச்சம்பவத்தின் போது அப்பேருந்தில் 5 ஆசிரியர்களும் 30 மாணவர்களும் இருந்தனர்.
இதனிடையே, மேல் விசாரணைக்காக அந்த ஓட்டுனர் 2 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வேளையில், அச்சம்பவம் குறித்து சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ-வும் புகாரைப் பெற்றுள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனம், பாதுகாப்பு பரிசோதனை மற்றும் தணிக்கைக்கு உட்படுத்தப்படுமென, JPJ தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
அவ்விபத்தின் dashcam கேமரா பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்பாடுத்தியுள்ளது.