
கோலாலம்பூர், மார்ச் 16 – UPSR, PT3 தேர்வுகளை மீண்டும் கொண்டு வர கல்வியமைச்சு திட்டமிட்டிருக்கவில்லை.
UPSR, PT3 போன்ற தேர்வு அடிப்படையிலான மதிப்பீட்டு முறையிலிருந்து வெளியேறி , அமைச்சு பள்ளி அடிப்படையிலான தேர்வு முறைக்கு மாறிவிட்டது.
பள்ளிகளில் கற்றலை மேலும் சுவாரஸ்யமாக்குவதிலும், மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்துவதிலும் பள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டு முறையே சிறந்த தேர்வாக அமைவதாக அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.
2013 -ஆம் ஆண்டிலிருந்து 2025 -ஆம் ஆண்டு வரையிலான மலேசிய கல்வி மேம்பாட்டு திட்டத்தின் அடைவுநிலையை பொறுத்தே, தேர்வு அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை மீண்டும் கொண்டு வருவதா இல்லையா என்பது தொடர்பில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படுமென அமைச்சர் கூறினார்.