
கோலாலம்பூர், ஜூலை-23-‘2026-2027 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டு’ சுற்றுலா ஊக்குவிப்புப் பிரச்சார இயக்கத்தை முழுமையாக ஆதரிக்கும் வகையில், புத்ராஜெயா IOI சிட்டி மாலில் உள்ள IRAMA Signature மற்றும் கோலாலம்பூர் ஓல்ட் மலாயாவில் உள்ள IRAMA Dining KL ஆகிய இரண்டும் அதிகாரப்பூர்வ வியூகப் பங்காளிகளாக நியமிக்கப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கை மலாய் சமையற்கலையின் தனித்துவத்தை உலக அரங்கிற்குக் கொண்டுச் செல்கிறது.
அவ்வகையில், ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுப் பயணிகளை ஈர்க்கும் வகையில், சித்ராவர்ணா 2026-ல் பாரம்பரிய மலாய் உணவுகளை நவீன முறையில் காட்சிப்படுத்த IRAMA Signature தயாராகி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, 70 சுற்றுலா முகவர்கள் மற்றும் ஆசிய பிரதிநிதிகளுக்காக பிரத்யேக பாரம்பரிய உணவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, மலேசியாவின் பல்வேறு சுவைகளை அவர்கள் நேரடியாக அனுபவிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.
35.6 மில்லியன் சுற்றுப் பயணிகளை ஈர்க்கும் இலக்குடன், மலேசியாவை உலகின் சிறந்த சமையல் சுற்றுலா மையமாக மாற்றுவதில் இந்த ஈடுபாடு முக்கிய பங்கு வகிக்கிறது.



