Latest

தம் மீதான தாக்குதல் தொடர்பில் காவல்துறை, அரசு மீது வழக்கு தொடுத்த காது கேளாத இ-ஹெய்லிங் ஓட்டுநர்

கோலாலம்பூர், ஜூலை-23-காது கேட்கும் திறனை இழந்த -ஹெய்லிங் வாகன ஓட்டுநர் ஒருவர் காவல் துறைக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக சிவில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். தன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் தமது காவல் புகாரை முறையாகக் கையாளாதது தொடர்பில் Ong Ing Keong எனும் அந்நபர் அவ்வழக்கைப் பதிவு செய்துள்ளார்.

Lance Corporal Muhamad Taufik Ismail, Inspektor Che W Hashimi Rafsanjani Che W Raksan, கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர், தேசியக் காவல்படைத் தலைவர் மற்றும் அரசாங்கம் ஆகியோரை அவர் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு KL Sentralலில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வெளியே நான்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு, வாகனத்தை ஓட்டத் தயாரான போது, சாதாரண உடையில் இருந்த Lance Corporal Taufik, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, ஓட்டுநர் இருக்கையின் திறந்திருந்த ஜன்னல் வழியாக தமது முகத்தில் குத்தியதாகவும் அதனால் காயம் ஏற்பட்டதாகவும் Ong தெரிவித்துள்ளார்.

அச்சம்பவம் தமது வாகனத்தின் dashboard cameraவில் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காவல் நிலையத்தில் புகார் அளித்து சிகிச்சை பெற்ற பிறகு, dashcam காட்சிகளைப் பார்த்த சில காவல் துறை அதிகாரிகள் கைப்பேசியைப் பறித்துக் கொண்டனர். புகாரைத் திரும்பப் பெற்று, காணொளிப் பதிவை அழித்தால் மட்டுமே கைப்பேசி திருப்பித் தரப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக Ong தெரிவித்தார்.

அதோடு 800 ரிங்கிட் இழப்பீட்டை ஏற்றுக் கொண்டு அவ்விவகாரத்தை முடித்துக் கொள்ளுமாறு தாம் வற்புறுத்தப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

கைப்பேசி நிரந்தரமாகப் பறிமுதல் செய்யப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் முதலில் ஒப்புக் கொண்டதாகவும், ஆனால் மறுநாளே விசாரணையைத் தொடர விரும்புவதாகக் காவல்துறையிடம் தெரிவித்ததாகவும் Ong கூறினார்.

Ong மீது வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, 2024ங்கில் Taufikக்கிற்கு 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 20 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!