Latestமலேசியா

XR Asia Summit 2026: பிரம்மாண்டமான புதிய தொழில்நுட்ப மாநாடு; சன்வே மாநாட்டு மையத்தில் டிசம்பர் 1 முதல் 3 வரை

ஆசியாவின் முன்னணி தொழில்நுட்ப நிகழ்வான XR Asia Summit 2026, வரும் டிசம்பர் 1 முதல் 3-ஆம் தேதி வரை கோலாலம்பூர் சன்வே மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

XR Summits நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் Louis Clovis தலைமையில் நடைபெற்ற சிறப்பு விளக்கக் கூட்டத்தில், இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து விவரிக்கப்பட்டது.

குறிப்பாக, புதிய தொழில்நுட்பங்களைக் கற்க தயங்குபவர்களை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்தார்.

இந்த 3 நாள் மாநாட்டில் கண்காட்சிகள், பயிலரங்குகள் மற்றும் e-sports விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

மேலும், ‘AI திரைப்படத் தயாரிப்பு’ போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 25,000 ரிங்கிட் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் நேரடியாக நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்புகளைப் பெறவும் இது ஒரு சிறந்த தளமாக அமையும்.

மேல் விவரங்களுக்கு xr-summits.com என்ற இணையத் தளத்தை வலம் வரலாம். அல்லது திரையில் காணும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!