இந்தியா, ஏப்ரல் 5 – விடா முயற்சி படத்தின் சண்டைக் காட்சிகளில் அஜித் நடித்துள்ள வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் எடுத்து வரும் நிலையில், இந்த படம் ஹாலிவுட் படம் போல் இருக்கும் என்று அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிரடியாக 3 வீடியோக்கள் வெளிவந்துள்ளன.
அதில், நெஞ்சை பதற வைக்கும் கார் விபத்து ஏற்படுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
இக்காணொளிகளைப் பார்க்கும் போது அஜித் எந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் படத்தில் நடிக்கிறார் என்பதை குறித்து அவரது ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.
இதனிடையே, ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் பலரும் அஜித்தை வியந்து பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.