Latestஉலகம்

“அதிகாலை 1 மணிக்கும் அழைப்பேசி எடுப்பார்கள்”: இந்தியர்களைப் பணியமர்த்த விரும்புவதற்கான இரகசியத்தை உடைத்த துபாய் புஜ் கலிஃபா கட்டிட நிறுவனர்

அபு தாபி, மே-8-‘அதிகாலை ஒரு மணிக்குக் கூட கைப்பேசிக்கு அழைத்தால் பதிலளிப்பார்கள்’ என்பதால், இந்தியர்களைப் பணியமர்த்த தனக்கு மிகவும் பிடிக்கும் என, துபாயின் Emaar Properties குழுமத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான Mohamed Alabbar வியப்புடன் கூறியுள்ளார்.

இவர் வேறு யாருமல்ல… உலகின் மிக உயரமான கட்டடமான Burj Khalifa-வை உருவாக்கியப் பெருமைக்குரியவராவார்.

இந்தியர்கள் இயல்பிலேயே மிகுந்த உழைப்பாளிகள் மற்றும் விசுவாசம் மிக்கவர்கள் என, ஐக்கிய அரபு சிற்றரசின் தலைநகரான அபு தாபியில் நடைபெற்ற பொது ஆய்வரங்கில் பிரமுகராக கலந்துகொண்டு பேசியபோது Alabbar குறிப்பிட்டார்.

வேலையின் அவசியத்தைப் புரிந்து கொண்டு எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்கும் இந்தியர்களின் குணம், Emaar நிறுவனத்தின் பிரம்மாண்ட வளர்ச்சிக்குத் தூணாக இருப்பதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.

தவிர, “திறமை உழைக்கத் தவறும்போது, கடின உழைப்பு அந்தத் திறமையை முறியடித்துவிடும் என்ற பழமொழிக்கேற்ப இந்தியர்கள் செயல்படுவதால் தான் அவர்களை நான் அதிகம் தேர்வு செய்கிறேன்” என்றார் அவர்.

துபாயின் நவீன அடையாளங்களை உருவாக்குவதில் இந்தியர்களின் பங்களிப்பு முக்கியமானது எனத் தெரிவித்துள்ள Alabbar, அனைத்துலகப் பணிச்சூழலில் இந்தியத் திறமையாளர்களுக்கு உள்ள நற்பெயரை உலகிற்கு மீண்டும் பறைசாற்றியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!