
ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-9 – மலேசிய எல்லைப் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS, இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த சரக்கு கொள்கலன் ஒன்றை ஜோகூர், தஞ்சோங் பெலெப்பாஸ் துறைமுகத்தில்
அதிரடியாகக் கைப்பற்றியுள்ளது.
வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், 2023 சுங்க ஏற்றுமதி தடை உத்தரவின் கீழ், மலேசியக் கொள்கைகளுக்கு எதிராக இஸ்ரேலுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்களை ஏற்றுமதி செய்ய முயன்றது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்டப் பொருட்கள் ‘2010 வியூக வர்த்தகச் சட்டத்தின்’ கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும், அதன் துல்லியமான தன்மையையும் அறிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் சட்டங்களையும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களையும் மீறி இஸ்ரேலுக்குப் பொருட்களை அனுப்ப முயலும் எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என AKPS எச்சரித்துள்ளது.



