உலகம்

அமெரிக்கா வெளியிட்ட 2-ஆம் கட்ட UFO வீடியோக்கள்: உலகம் முழுவதும் மீண்டும் வெடித்தது விவாதம்

வாஷிங்டன், மே-24,

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சான Pentagon, UFO என அழைக்கப்படும் விவரிக்க முடியாத விசித்திர வான்வெளி நிகழ்வுகள் தொடர்பான இரண்டாம் கட்ட வீடியோக்கள் மற்றும் ஆவணங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

​இந்தப் புதிய தொகுப்பில் பொது மக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் தரப்பிலிருந்து பெறப்பட்ட சுமார் 50 வீடியோக்கள் மற்றும் சான்றுகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, மத்தியக் கிழக்கு நாடுகள், சிரியா மற்றும் ஈரான் எல்லைக்கு அருகே வானில் விசித்திரமான பொருள்கள் பறக்கும் காட்சிகள் இதில் பதிவாகியுள்ளன.

இவை மிக அதிவேகமாக நகர்வதும், வானில் அசாதாரணமான வடிவங்களை உருவாக்குவதும் வீடியோக்களில் தெரிகிறது.

ஆனால், அவை உண்மையிலேயே என்ன என்பதற்கான விளக்கங்கள் இல்லை.

​போதிய தரவுகள் இல்லாததால் இவை இன்னும் தீர்க்கப்படாத மர்மங்களாகவே நீடிக்கின்றன.

இவை வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலங்கள் என்பதற்கோ அல்லது ஏலியன் இருப்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்றும், சாதாரணமான அல்லது இதுவரை அறியப்படாத வேறு ஏதேனும் காரணங்கள் இதற்கு பின்னணியில் இருக்கலாம் என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!