Latestஉலகம்

WhatsApp-இல் செய்திகளை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பும் புதிய வசதி அறிமுகம்

மென்லோ பார்க், நவ.26-பிரபல குறுஞ்செய்தி செயலியான WhatsApp, செய்திகளை முன்கூட்டியே திட்டமிட்டு, குறிப்பிட்ட நேரத்தில் தானாக அனுப்பும் புதிய வசதியை வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தவுள்ளதாக Amanz செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வசதியின் மூலம், பயனர்கள் தாங்கள் அனுப்ப விரும்பும் செய்தியைத் தயாரித்து, 10 நிமிடங்கள் முதல் 14 நாட்கள் வரையிலான கால இடைவெளியில் எந்த நேரத்தில் அனுப்ப வேண்டும் என்பதைத் தேர்வு செய்யலாம். குறிப்பிட்ட நேரத்தில் பயனரின் கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் செய்தி தானாகவே அனுப்பப்படும்.

இந்த வசதி End-to-End Encryption மூலம் பாதுகாக்கப்படுவதுடன், தனிப்பட்ட மற்றும் குழு உரையாடல்களில் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை அனுப்பவும் உதவும்.

இதனைப் பயன்படுத்த, வழக்கம்போல் செய்தியைத் தட்டச்சு செய்துவிட்டு, ‘அனுப்பு’ பொத்தானை அழுத்திப் பிடிக்க வேண்டும். பின்னர் தோன்றும் தேர்வில், செய்தி அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடலாம். மேலும், திட்டமிடப்பட்ட செய்திகளை அனுப்புவதற்கு முன்பு சரிபார்க்கவும், தேவைப்பட்டால் நீக்கவும் முடியும்.

திட்டமிட்டு அனுப்பப்படும் செய்திகள் வழக்கமான செய்திகளைப் போலவே பெறுநர்களுக்குக் காட்சியளிக்கும். அவை முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என்பதற்கான அடையாளம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. இந்த வசதி படிப்படியாக அறிமுகப்படுத்தப்படுவதால், பயனர்கள் தங்களது WhatsApp செயலியை அண்மைய பதிப்பிற்குப் புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!