Latestமலேசியா

கே.கே. மார்ட்: அடுத்த வளர்ச்சிப் பயணத்துக்கு பங்குச் சந்தை பட்டியல் வழி ஒரு புதிய தொடக்கம் – நிறுவனர் சாய் கீ கான்

கோலாலம்பூர், நவ. 26 – 24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாளும் மக்களுக்கு வசதியான சேவையை வழங்கி வரும் கே.கே. மார்ட், தனது 25 ஆண்டுகாலப் பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற நிறுவனத்தின் பங்குச் சந்தைப் பட்டியலிடல் விளக்கக் கையேடு வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அதன் நிறுவனர் டத்தோஸ்ரீ சாய் கீ கான் (Datuk Seri Chai Kee Kan), இந்தப் பட்டியலிடல் புதிய பயணத்துக்கான தொடக்க மேடையாக அமையும் என்றார்.

மேலும் பல சமூகங்களைச் சென்றடையும் நோக்கில், நாடு முழுவதும் கிளைகளின் எண்ணிக்கையை 1,500-க்கும் அதிகமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது 1,100-க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டுள்ள நிறுவனம், 2028 ஜூன் மாதத்திற்குள் சுமார் 1,500 கடைகளை எட்ட இலக்கு வைத்துள்ளது.

பொருட்களின் தேர்வை விரிவுபடுத்துதல், விநியோகச் சங்கிலி மற்றும் விநியோக வழிகளை வலுப்படுத்துதல், செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், தங்களின் கடை வணிகத்தை மேலும் உறுதியானதாக உருவாக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இந்த ஐபிஓ (IPO) மூலம் 462 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட உள்ளது. ஒரு பங்கின் விலை 55 சென் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐபிஓவில் நிறுவனத்தின் 24 விழுக்காட்டுப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த 12 மாதங்களில், நிறுவனம் 1.77 பில்லியன் ரிங்கிட் வருவாயையும், 102.5 மில்லியன் ரிங்கிட் நிகர லாபத்தையும் பதிவு செய்துள்ளது.

முதலீட்டு விண்ணப்பங்கள் டிசம்பர் 2-ஆம் தேதி முடிவடைகின்றன. டிசம்பர் 15-ஆம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தில் ஆதரவளித்த மேபேங்க் இன்வெஸ்ட்மென்ட் (Maybank Investment ) வங்கி, நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் சாய் கீ கான் நன்றி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!