
கோலாலம்பூர்- செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையின் வேகமான வளர்ச்சி நீடிக்குமா என்ற சந்தேகம் முதலீட்டாளர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பான முதலீட்டுச் சொத்துகளுக்கான தேவை அதிகரித்ததால், இன்று அமெரிக்க டாலருக்கு நிகராக மலேசிய ரிங்கிட் மதிப்பு உயர தொடங்கியுள்ளது.
காலை 8 மணியளவில், ரிங்கிட் 4.1135/1220 என்ற நிலைக்கு வலுப்பெற்றது. முந்தைய நாள் வர்த்தக முடிவில் அது 4.1170/1220 ஆகப் பதிவாகியிருந்தது.
Bank Muamalat Malaysia Bhd தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமட் அஃப்சானிசாம் அப்துல் ரஷீத் (Dr Mohd Afzanizam Abdul Rashid) கூறுகையில், அமெரிக்காவின் தனிநபர் நுகர்வுச் செலவின (PCE) பணவீக்கம் அக்டோபரில் 3.8 விழுக்காடாக உயர்ந்தாலும், அமெரிக்க டாலர் குறியீடு (DXY) 0.10 விழுக்காடு சரிந்து 103.708 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
இதனிடையே, AI துறையின் வளர்ச்சி தொடர்பான சந்தேகங்களால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துகளை நாடத் தொடங்கியுள்ளதாகவும், இதனால் ரிங்கிட் இன்றைய வர்த்தகத்தில் குறுகிய வரம்பிற்குள் நிலைத்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட் சரிவைக் கண்டது. யூரோ, பிரிட்டிஷ் பவுண்ட் மற்றும் யென் ஆகியவற்றுக்கு எதிராக அது பலவீனமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



