Latestமலேசியா

2 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இருவரையும் விடுதலை செய்தது உயர் நீதிமன்றம்!

ஜோகூர் பாரு, நவம்பர் 26 – இரண்டு கிலோகிராமுக்கும் அதிகமான மெத்தாம்பெட்டமின் (Methamphetamine) போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரு ஆடவர்கள், போதிய ஆதாரங்கள் இல்லாததால் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

அவ்விருவருக்கும் எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறியதாக நீதித்துறை ஆணையர் தெரிவித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் போதைப்பொருளுடன் தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் கைரேகை அல்லது டிஎன்ஏ ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும், சாட்சியங்களில் முரண்பாடுகள் மற்றும் ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் குறைபாடுகள் இருந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி, கூலாய், ஜாலான் பூங்கா தஞ்சோங்கிலுள்ள (Jalan Bunga Tanjung, Kulai) ஒரு பட்டறைக்கு முன்னால் 2,145.68 கிராம் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருளைக் கூட்டாகக் கடத்தியதாக இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

குற்றவியல் விசாரணையின் முடிவில், அரசுத் தரப்பு முதற்கட்ட ஆதாரங்களைக்கூட நிரூபிக்கத் தவறியதால், இருவரும் தங்களது தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டிய அவசியமின்றி விடுதலை செய்யப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!