Latestமலேசியா

பராமரிப்பாளரின் கவனக்குறைவால் 5 மாதக் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம்

கோலாலம்பூர், நவ.26-ஐந்து மாதக் குழந்தையொன்று, பராமரிப்பாளரின் வீட்டில் சுயநினைவற்ற நிலையில் இருந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அச்சம்பவத்தில் கவனக்குறைவு நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அக்குழந்தையைப் பராமரிப்பவரின் வீட்டிலிருந்து அதன் தாயார் அழைத்து வந்த பின்னரே அவ்விவரம் தெரிய வந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதுடன், முகம் மற்றும் காதுகளில் காயங்களும் தழும்புகளும் காணப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, அக்குழந்தையை அதன் தாயார், Hospital Canselor Tuanku Muhriz (HCTM) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். தற்போது அக்குழந்தை UKM குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறது.

இதனிடையே அச்சம்பவம் தொடர்பில் நவம்பர் 14ஆம் தேதி மாலை 5.46 மணிக்கு HCTM மருத்துவமனை மருத்துவ அதிகாரியிடமிருந்து புகார் கிடைத்ததாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் Datuk Fadil Marsus தெரிவித்தார். அச்சம்பவம் குழந்தைகள் சட்டம் பிரிவு 31(1)(a)-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 03-2115 9999 என்ற கோலாலம்பூர் காவல்துறையின் அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!