Latestமலேசியா

2027 தேசிய தினத்திற்கு முன்போ பின்போ 16-ஆவது பொதுத் தேர்தல் நடைபெறலாம்; அன்வார் சூசகம்

கோலாலம்பூர், நவம்பர்-26,நாட்டின் 16-ஆவது பொதுத் தேர்தல், அடுத்தாண்டு தேசிய தினத்திற்கு முன்னதாகவோ அல்லது அதற்குப் பிறகோ நடைபெறக்கூடும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டியுள்ளார்.

ஐந்தாண்டு கால நாடாளுமன்ற தவணை அடிப்படையில், 2028-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு முன்னதாகப் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

எனவே, போதிய அவகாசம் இருப்பதால், சம்பந்தப்பட்ட அனைவரும் சற்று பொறுமைக் காக்க வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.

புத்ராஜெயாவில் மடானி அரசாங்கம் அமைந்த நான்காண்டு நிறைவை ஒட்டி, நேற்றிரவு RTM தொலைக்காட்சியின் சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பிரதமர் அவ்வாறு தெரிவித்தார்.

3 மாநிலத் தேர்தல்களில் கிடைத்த தொடர் வெற்றியின் அடிப்படையில், பொதுத் தேர்தலிலும் வெற்றிப் பெறலாம் என்ற நம்பிக்கையில், நாடாளுமன்றக் ககலைப்புக்கு தேசிய முன்னணி கோரிக்கை விடுத்து வரும் நிலையில், பிரதமரின் இவ்வறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நிலையில், அடுத்த அரசாங்கத்தின் அமைப்பு, ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் வாக்காளர்கள் வழங்கும் ஆதரவைப் பொறுத்தே அமையும் என்றார் அவர்.

அப்படி ஒருவேளை மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டால், நாட்டின் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க விரும்புவதாகவும் அன்வார் தெரிவித்தார்.

இதனிடையே, அரசியல் தலைவர்கள் முன்வைக்கும் சமயம் சார்ந்த கருத்துகளை மக்கள் ஆராய்ந்து, அவற்றின் ஆதாரங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

அரசியல் கருத்துகளைச் சமயத் தீர்ப்புகளாக மக்கள் தவறாகக் கருதிவிடக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

அரசியல் நோக்கங்களுக்காகச் சமயம் சார்ந்த தவறான விளக்கங்களைப் பரப்புவதற்குச் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அன்வார் சுட்டிக்காட்டினார்.

2022 நவம்பர் 24-காம் தேதி அன்வார் நாட்டின் பத்தாவது பிரதமராகப் பவியேற்றது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!