
செனாவாங், நவம்பர்-26,சிரம்பான், செனாவாங் நெடுஞ்சாலை R&R அருகே நேற்று பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில், சுகாதார அமைச்சின் 13 ஊழியர்களும் பேருந்து ஓட்டுநரும் காயமின்றி உயிர் தப்பினர்.
KKM-முக்குச் சொந்தமான அந்தப் பேருந்து, புத்ராஜெயாவிலிருந்து மலாக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
நண்பகல் 12 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, சுமார் 15 நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்ததாக சிரம்பான் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் நடவடிக்கைத் தலைவர் Fazli Ali தெரிவித்தார்.
அவர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது, பேருந்து இன்னமும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
எனினும் பேருந்தில் இருந்த 14 பேரும் பாதுகாப்பாக வெளியேறிய நிலையில், பேருந்தின் சுமார் 85 விழுக்காட்டுப் பகுதி தீயில் சேதமடைந்ததாக அவர் தெரிவித்தார்.



