Latestமலேசியா

மின்சார விநியோகத் தடை: கிளானா ஜெயா எல்ஆர்டி வழித்தடத்தின் 4 நிலையங்களில் சேவை பாதிப்பு

கோலாலம்பூர், நவ.26-சுபாங் ஜெயா மற்றும் Lembah Subang நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மின்சார விநியோகத் தடையால், கிளானா ஜெயா எல்ஆர்டி வழித்தடத்தின் நான்கு நிலையங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து, Rapid KL மாற்று ரயில் மற்றும் இலவசப் பேருந்து சேவைகளைத் தொடக்கியுள்ளது.

மின்சாரத் தடையால் சுபாங் ஜெயா, Glenmarie, Ara Damansara, Lembah Subang ஆகிய நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. Putra Heightsசில் இருந்து வரும் ரயில்கள் சுபாங் ஜெயாவிலும், கோம்பாக்கிலிருந்து வரும் ரயில்கள் Lembah Subangங்கிலும் ஆறு நிமிட இடைவெளியில் திரும்பிச் செல்கின்றன.

மேலும், பாதிக்கப்பட்ட நான்கு நிலையங்களுக்கு இடையே platform 2 வழியாக 12 நிமிட இடைவெளியில் இணைப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. அதே வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப 15 முதல் 20 நிமிட இடைவெளியில் இலவசப் பேருந்து சேவைகளும் வழங்கப்படுகின்றன.

இந்த இடையூறு காரணமாகப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும், ரயில்களின் வேகம் குறைக்கப்படுவதால் நிலையங்களில் நிற்கும் நேரமும் அதிகரிக்கும் என்றும் Rapid KL தெரிவித்துள்ளது. எனவே, Ampang/Sri Petaling, Kajang மற்றும் புத்ராஜெயா வழித்தடங்களை மாற்றுப் பயண வழிகளாகப் பயன்படுத்துமாறு அது அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, சேவையை வழக்கநிலைக்குக் கொண்டு வர தொழில்நுட்பக் குழுவினர் பழுதுபார்ப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளுக்கு உதவ துணைக்காவல் படையினரும் நிலைய ஊழியர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சேவை நிலவரம் குறித்த அண்மைத் தகவல்களை Rapid KL சமூக ஊடகங்கள் மற்றும் MyRapid PULSE செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!