
அமெரிக்காவில் அதிகாலை நேரத்தில், பெண்ணொருவரின் வீட்டிற்குள் கரடி ஒன்று புகுந்து, அங்கிருந்த KFC உணவை சாப்பிட்டதுடன் கண்ணாடி மேசையையும் உடைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்தபோது தூங்கிக் கொண்டிருந்த அப்பெண்ணுக்கு, வீட்டிற்கு அருகில் வசிக்கும் அவரது சகோதரி சத்தம் கேட்டு அதிகாலை 5 மணியளவில் தகவல் தெரிவித்தார்.
வீட்டில் வைக்கப்பட்டிருந்த மீதமான உணவின் வாசனையால் கரடி ஈர்க்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க, உணவு மற்றும் செல்லப்பிராணிகளுக்கான உணவை வெளியில் வைக்க வேண்டாம் என்றும், கதவுகளை முறையாக மூடி வைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



