
தெஹ்ரான், செப்டம்பர்-26 – அமெரிக்காவுடன் கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மீண்டும் திரும்புவதற்கு ஈரான் விரும்புவதாக அந்நாட்டு அதிபர் மசூட் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார்.
ஐநா பொதுப் பேரவையில் அமெரிக்காவுக்கு அடிபணியப் போவதில்லை என பேசிய சில நாட்களிலேயே அதிபர் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்ற சீனாவின் அழைப்பை ஈரான் முழுமையாக வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், போர் தொடருவதை ஈரான் விரும்பவில்லை என்றும், போரை முடிவுக்குக் கொண்டுவருவது அமெரிக்காவின் கைகளில்தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, இரு நாடுகளுக்குமிடையே முழுமையான அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் ஜூன் மாதம் கையெழுத்தான இந்த ஒப்பந்தம் குறுகிய காலத்திலேயே முறிவடைந்தது.
இந்நிலையில், நவம்பர் மாத அமெரிக்க மத்திய தவணைத் தேர்தலுக்கு முன்னதாக வாஷிங்டன் இந்த ஒப்பந்தத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.



